எங்கும் எதிலும் சர்க்கரை மயம்

பிரிட்டனில் உள்ள முன்னணி காப்பிக் கடைகளிலும் துரித உணவகங்களிலும் வழங்கப்படும் சுடுபானங்களில் சேர்க் கப்படும் சர்க்கரையின் அளவைக் கேட் டீர்கள் எனில் நீங்கள் மலைத்துப் போவது நிச்சயம். 'ஆக்ஷன் ஆன் சுகர்' எனும் பிரிட்டிஷ் அறநிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 131 நறுமண சுடுபானங் களை ஆய்வுக்கு உட்படுத்திய அந்த நிறுவனம், அதில் 98% பானங்களில் அவற்றின் மீது சிவப்பு எச்சரிக்கை வில்லை ஒட்டும் அளவுக்கு அதிகப் படியான சர்க்கரை இருப்பதைக் கண்ட றிந்தது.

அவற்றில் மூன்றில் ஒரு பானம், ஒரு கலன் கோக்க கோலாவில் உள்ளதைப் போல அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது. ஒரு கலன் கோக்க கோலாவில் ஒன்பது தேக்கரண்டி சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக அதிகமாக, ஸ்டார்பக்ஸ் நிறு வனத்தின் பெரிய (வென்டி) கிண்ண 'ஹாட் மல்டு ஃப்ரூட்' பானத்தில் (படம்) 25 தேக்கரண்டி சர்க்கரை இருப்பது கண்ட றியப்பட்டது. பிரிட்டனின் இன்னொரு முன்னணி காப்பிக் கடை குழுமமான 'கோஸ்டா கஃபே'யின் பெரிய அளவு 'சாய் லாட்டே' வில் 20 தேக்கரண்டி சர்க்கரை இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!