நாட்டின் முன்னோடி பொறியாளர் மறைவு

வீ. பழனிச்சாமி

சிங்கப்பூரின் முன்னோடிப் பொறியாளர் என்ற முறையில் நாட்டின் உள்கட்டமைப்புக்கு அரும்பங்காற்றியவர், சிங்கப் பூர் இந்திய அமைப்புகளின் இயக்குநர் சபைகள் பலவற்றில் அங்கம் வகித்தவர், ஹாக்கி, கிரிக்கெட், காற்பந்து, ரக்பி என நான்கு விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த ஒரே சிங்கப்பூரர் போன்ற பல பெருமைகளுக்குரிய டாக்டர் ஆ. விஜயரத்னம் நேற்றுக் காலை தமது இல்லத்தில் அமைதியாகக் காலமானார். அவருக்கு வயது 94. விக்டோரியா பள்ளியில் பயின்று அரசாங்கக் கல்வி மானாக கோலாலம்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பயின்று, பின்னர் பிரைட்டன் மேல்நிலை தொழில் நுட்பக் கல்லூரியில் படித்து பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் அவர்.

இங்கிலாந்திலிருந்து 1953ல் சிங்கப்பூர் திரும்பிய டாக்டர் விஜய், பொதுப் பணித்துறை, சிங்கப்பூர் துறைமுக ஆணை யத்தில் பணியாற்றினார். பாய லேபாரிலிருந்து சாங்கிக்கு இடம் மாற விருந்த புதிய சாங்கி விமான நிலையம் அமைய பொறுப்பேற்றவர்களில் டாக்டர் விஜய் முக்கியமானவர். அதனுடன் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் கீழ் கொள்கலன் துறைமுகங்கள் அமைக்கப்பட்டதிலும் டாக்டர் விஜய்யின் நிபுணத்துவ அறிவு வழிகாட்டியது. தமது 75வது வயதில் சிங்கப்பூர் துறைமுக ஆணை யத்தின் பொறியியல் துறை யின் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் முதலாவது இணை வேந்தராக 1992 முதல் 2005 வரை பணியாற்றினார்.

'முதல் உள்ளூர் பொறியாளர்' என்ற பெருமையைப் பெற்று சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் பங்காற்றிய டாக்டர் ஆ. விஜயரத்னம் நேற்றுக் காலை தமது வீட்டில் அமைதியாகக் காலமானார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!