இன்னும் பத்தாண்டுகளில் சாங்கி விமான நிலையம் ஆண்டுக்கு 700,000 விமானங்களைக் கையாளும்

இன்னும் பத்தாண்டுகளில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் செயல்பாட்டிற்கு வந்ததும் அந்த விமான நிலையத்தால் ஆண்டிற்கு 700,000 விமானங்களைக் கையாள முடியும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். இது, இப்போது சாங்கி விமான நிலையம் கையாளும் விமானங் களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்காகும். சிங்கப்பூருக்கு மேலே பறக்கும் விமானங்களை இது கணக்கில் கொள்ளவில்லை. ஆயினும், அப்படிப் பறக்கும்போது அந்த விமானங்களும் இங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பொறுப்பின்கீழ் வருகின்றன.

இப்போதைக்கு, ஓராண்டுக்கு அத்தகைய 300,000 விமானங் களை சிங்கப்பூர் கையாள்வதாக அமைச்சர் டியோ குறிப்பிட்டார். விமானப் போக்குவரத்து குறிப் பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகை யால், விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்புகளிலும் செயல்முறைகளிலும் முதலீடு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றார் திருவாட்டி டியோ. மேலும், விமானங்கள் திறம்பட நிர்வகிக்கப்பட வேண்டியதை உறுதி செய்ய இவ்வட்டாரத்திலுள்ள நாடுகள் அணுக்கமாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!