சீனா: ஊடி தீவில் ஆயுதம் வைத்திருக்கிறோம்

பெய்ஜிங்: சர்ச்சைக்­கு­ரிய தென்­ சீ­னக் கடல் பகு­தி­யில் சீனா ராணு­வ ­ப­லத்தை அதி­க­ரித்­தி­ருப்­பது குறித்து அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஜான் கெர்ரி சாடி­யுள்ள வேளையில் அங்கு ஆயு­தங்களை நீண்ட­கா­ல­மாக வைத்­தி­ருப்­ப­தாக சீனா உறு­திப்­படுத்­தி­யுள்­ளது. சீனாவில் ஆளும் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யு­டன் அணுக்­க­மான உறவு வைத்­துள்ள 'குளோபல் டைம்ஸ்' செய்­தித்­தாள் இந்தத் தகவலை சீனாவின் தற்­காப்பு அமைச்­சர் உறு­திப்­படுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டது. இருந்தா­லும் அங்­கி­ருக்­கும் ஆயு­தங்கள் எப்­ப­டிப்­பட்­டவை என்பது குறித்த தகவல் ஏதும் அளிக்­க­வில்லை. தனது எல்லைக்­குள் ஆயு­தங்களை நிறுவித்தற்­காப்பை மேம்படுத்த சீனா­வுக்கு அதி­கா­ரம் உள்­ள­தாக 'குளோபல் டைம்ஸி'ன் தலை­யங்கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தது.

தென்­சீ­னக் கடற்­ப­கு­தி­யில் இருக்­கும் பிரச்­சினைக்­கு­ரிய ஊடி தீவில் தரை­யி­லி­ருந்து மேலே பாயும் ஏவு­கணை­களை சீனா நிறுத்தி வைத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் உறு­திப்­படுத்­தி­யுள்­ள­னர். அந்தப் பகு­தி­யில் சீனா தனது படை­ப­லத்தை அதி­க­ரித்­தி­ருப்­பது குறித்து அமெ­ரிக்கா அக்கறை தெரி­வித்­துள்­ளது. எட்டு ஏவு­கணை­களுக்­கான இரண்டு மின்தேக்­கிகள், ஒரு ராடார் சாதன அமைப்பு ஆகியவை ஊடி தீவைச் சென்றடைந்­துள்­ள­தாக இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் 'ஃபாக்ஸ் நியூஸ்' தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!