தெலுங்கு ‘பழுப்பு’ தமிழில்- ‘எவன்டா’

தெலுங்கில் 'பழுப்பு' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம், தமிழில் 'எவன்டா' என்ற பெயரில் வெளியாகிறது. இதில் ரவிதேஜா நாயகனாகவும், சுருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜராஜா இப்படத்தை தமிழாக்கம் செய்துள்ளார். "இது முழுக்க முழுக்க நகைச்சுவையும் கலாட்டாக்களும் கலந்த படம். எனவே ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் நிச்சயம் வயிறு குலுங்க சிரிப்பார்கள். நாயகன் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவர். எப்படியாவது மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ்.

இதற்காக மற்றவர்களை ஏமாற்றும் சுருதிஹாசனிடம் தன் மகனைக் காதலிக்குமாறு கூற, சுருதியும் அவ்வாறே செய்கிறார். "ஆனால் நாயகன் ரவிதேஜாவுக்கு இந்த உண்மை தெரிந்துவிடுகிறது. எனவே அவரும் சுருதியை காதலிப்பது போல் நடிக்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் வில்லன் கூட்டம் கொலை செய்ய முயற்சிக்கிறது. இதையடுத்து என்ன ஆகிறது என்பது முடிவு," என்கிறார் ராஜராஜா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!