சாங்கி வில்லேஜ் வட்டாரத்தில் இயந்திரயமாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் நேற்று அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதற்கு முன்பு சாங்கி வில்லேஜில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக 183 இடங்கள் மட்டுமே இருந்தன. இந்தப் புதிய இயந்திரமய மாக்கப்பட்ட வாகன நிறுத்து மிடத்தால் தற்போது அவ்வட்டாரத் தில் வாகனங்களை நிறுத்தி வைக்க மேலும் 121 இடங்கள் உள்ளன.
முதல் இயந்திரமயமாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடமான இந்த சாங்கி வில்லேஜ் வாகன நிறுத்துமிடத்தை அங்குள்ள குடியிருப்பாளர்களும் அவ்வட்டாரத்துக்கு வருபவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். சாங்கி வில்லேஜைத் தொடர்ந்து பாங்கிட் சாலையிலும் யீஷூன் அவென்யூ 4லும் இயந்திர மயமாக்கப்பட்ட வாகன நிறுத்து மிடங்கள் அமைக்கப்பட்டன.
இவை கடந்த மாதத்திலிருந்து இயங்கி வருகின்றன. இந்த இரண்டு இடங்களைக் காட்டிலும் சாங்கி வில்லேஜில் உள்ள வாகன நிறுத்துமிடம் பெரியது.
இயந்திரமயமாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தி காரை நிறுத்தி, பிறகு அதை மீண்டும் பெறும் முறையைப் பார்வையிடும் தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் (இடமிருந்து இரண்டாவது). படம்: பெரித்தா ஹரியான்