தைவானின் கட்டடச் சட்டத்தில் மாற்றம்

தைப்பே: நிலநடுக்கத்தால் 16 மாடிக் கட்டடம் சரிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாக தைவான் அதிபர் சாங் சான்-செங் கூறியுள்ளார். அந்தக் கட்டடத்தின் கட்டுமானத்தில் குறைபாடு இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாங் சான்=செங் தனது அவையின் பணிகளில் பேரிடர் தடுப்பை மேம்படுத்துவது முதலிடம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய தரத்தில் கட்டடங்களின் வடிவமைப்பு மேம்படுத்தப்படுவது, கட்டடங்களைப் பார்வையிடும் அதிகாரிகளின் பொறுப்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்காக கட்டடச் சட்டத்தில் மாற்றம் செய்து அதனையும் பேரிடர் தொடர்பான வேறு இரண்டு சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றையும் அவையின் ஒப்புதலுக்கு அனுப்பவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!