நஜிப்: வரவுசெலவுத் திட்டத்தை மறுசீரமைக்கத் தேவையில்லை

சான் ஃபிரான்சிஸ்கோ: பெட்ரோலிய எண்ணெய் விலைகள் நிலைத்தன்மை பெற்று, பீப்பாய் ஒன்றின் விலை 30 முதல் 40 அமெரிக்க டாலராக சிலகாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் வரவுசெலவுத் திட்டம் 2016ஐ மீண்டும் மறுசீரமைக்கத் தேவையில்லை என மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலருக்குக் கீழ் இறங்கினால் வரவுசெலவுத் திட்டம் 2016ஐ மறுசீரமைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் கூறினார். பெட்ரோலிய எண்ணெய் விலைகள் பீப்பாய் ஒன்றுக்கு 48 அமெரிக்க டாலராக இருக்கும்போது மலேசியாவின் வரவுசெலவுத் திட்டம் 2016 வடிவமைக்கப் பட்டது. எண்ணெய் விலை பீப்பாய்க்கு 32 அமெரிக்க டாலராக இறங்கியதால் கடந்த மாதம் மலேசிய வரவுசெலவுத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!