தென்சீனக் கடல் உரிமை: சட்டப்படி தீர்த்துக்கொள்ள ஆஸ்திரேலியா வலியுறுத்து

சச்­ச­ரவைத் தவிர்க்க தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் இருக்­கும் தீவுப் பகு­தி­களை ராணு­வ­ம­ய­மாக்­கு­வதை சீனா நிறுத்த வேண்டும் என ஆஸ்­தி­ரே­லியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஊடி தீவில் சீனா ஏவு­கணை­களை அமைத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா சாடிய ஒரு நாளைக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லியா இவ்வாறு குறிப்­பிட்­டுள்­ளது. முக்­கி­ய­மான கடல்­வ­ழி­யான அந்தப் பகு­தி­யில் தற்­காப்­புக்­காக ஆயு­தங்களை வைத்­தி­ருப்­ப­தாக சீனாவும் நேற்று ஒப்­புக்­கொண்­டி­ருந்தது. ஆனால் இது கவலைக்­கு­ரி­ய­போக்கு என அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஜான் கெர்ரி குறிப்­பிட்­டி­ருந்தார். சீனாவும் அமெ­ரிக்­கா­வும் அனைத்­து­லக சட்­டப்­படி இந்தப் பிரச்­சினை­களுக்­குத் தீர்வு காண்பது இந்த வட்­டா­ரத்­தின் வளத்­துக்கு அவ­சி­யம் என ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் மால்கம் டர்ன்­புல் கூறி­யுள்­ளார். தென்­சீ­னக் கடல் பகு­தியைச் சொந்தம் கொண்டா­டும் நாடு­கள் தீவு­களில் கட்­ட­டங்கள் எழுப்­பு­வது, ராணு­வ­ம­ய­மாக்­கு­வது, நில­மீட்பு நட­வ­டிக்கை­களில் ஈடு­படு­வது ஆகி­ய­வற்றைத் தவிர்க்­கு­மாறு திரு டர்ன்­புல், நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜான் கீ ஆகியோர் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

தென்­சீ­னக் கடல் பகுதி முழு­வதை­யும் சீனா சொந்தம் கொண் டா­டு­கிறது. அங்கு கட்­ட­டங்கள் எழுப்­பு­வதன்­மூ­லம் தேடுதல், மீட்புப் பணிகளை எளிதாக மேற்­கொள்ள இயலும் என அது குறிப்­பிட்­டா­லும் அப்­ப­கு­தி­யில் தற்­காப்பு நட­வ­டிக்கை­களை மேற்­ கொள்­வது தனது உரிமை என அது வலி­யு­றுத்தி வந்துள்­ளது. அதே வேளையில், அந்தக் கடல் பகு­தியைச் சுற்­றி­யுள்ள நாடு­க­ளான புருணை, மலேசியா, பிலிப்­பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகி­ய­ன­வும் அக்­க­டல் பகு­தி­யின் பகு­தி­களைச் சொந்தம் கொண் டா­டு­கின்றன. இருப்­பி­னும் தடை­யற்ற போக்­கு­வ­ரத்தை உறு­தி­செய்­வதற்­காக அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடுகள் விமா­னங்கள், கப்­பல்­களை அனுப்­பு­கின்றன. ஆனால் அச்­செ­யல்­கள் தன்னைச் சின­மூட்­டு­வ­தாக சீனா குறிப்­ பி­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!