அனுஷ்கா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார். தனது சம்பளத்தின் பெரும்பகுதியை பெங்களூரில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்கிறார். அங்கு பெரிய பண்ணை வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். டாப்சி திருமணங்களை நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்துகிறார். மாப்பிள்ளை, பெண்ணை மட்டும் அழைத் துக்கொண்டு போனால் போதும். திருமண மண்டபம் ஒப்பந்தம் செய்வது, அலங்காரம் செய்வது, விதவிதமான உணவு வகைகளைத் தயார் செய்வது போன்ற அனைத்தையும் டாப்சியின் நிறுவனம் கவனித்துக்கொள்ளும்.
ஹன்சிகா மும்பையில் நிலம் வாங்கி ஆதரவற்றோருக்கு இல்லம் கட்டி வருகிறார். 'சகுனி', 'மாஸ்' படங்களில் நடித்து பிரபலமான பிரணிதா ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பங்குதாரராக சேர்ந்து இருக்கிறார். விரைவில் சென்னை, ஹைதராபாத்திலும் இந்த ஓட்டலின் கிளைகளை விரிவுபடுத்தப் போகிறாராம். காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். குஷ்பு படநிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார். சிம்ரனும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து வெளியிட உள்ளார்.