சிறுவரிடையே துப்பாக்கி கலாசாரம்

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்க துப்­பாக்­கித் தொழில்­துறை, இளம் பிள்ளை­களை ஈர்க்­கக்­கூ­டிய வண்­ண­ம­ய­மான துப்­பாக்­கிகளை அறி­மு­கப்­படுத்தி சிறுவர் அவற்றைப் பயன்­படுத்துவதற்­குப் பெற்றோரை ஊக்­கு­விப்பதாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. அமெ­ரிக்க துப்­பாக்கித் தயா­ரிப்­பா­ளர்­கள் இளம் பிள்ளை­களை ஈர்க்­கும் விளம்பர உத்­தி­களை நாடு­வ­தா­கத் துப்­பாக்கி வன்­முறையை நிறுத்­தும் நோக்கில் செயல்­படும் வன்­முறைக் கொள்கை நிலையம் தனது அறிக்கை­யில் குறிப்­பிட்­டுள்ளது. இளம் பிள்ளை­களிடையே துப்­பாக்­கிக் கலா­சா­ரத்தை அதி­க­ரிப்­ப­தன் மூலம் துப்­பாக்கி விற்­பனையைக் கூட்­டு­வ­து­டன் எதிர்­கால அர­சி­யல் போராட்­டங்களுக்கு அடுத்த தலை ­முறை­யி­னரைத் தயார்ப்­படுத்­து ­வ­தும் இந்தச் செயல்­களின் நோக்கம் என அந்த நிலையம் குறிப்­பிட்­டது.

துப்­பாக்­கி­யின் பாகங்களை பிளாஸ்­டிக்­கால் செய்­வதன் மூலம் அதனைக் கையாள்­வதை எளி­தாக்­கு­வது, அதிக கன­மில்­லாத துப்­பாக்­கிகளை உரு­வாக்­கு­வது இளஞ்­சி­வப்பு போன்ற கவர்ந்­தி­ழுக்­கும் வண்­ணங்களில் துப்­பாக்­கிகளை உரு­வாக்­கு­வது போன்ற உத்­தி­க­ளால் இளம் பிள்ளை­களைக் கவர துப்­பாக்கி தயா­ரிப்­பா­ளர்­கள் முற்­படு­கின்ற­ னர். என்­ஆர்ஏ எனும் நிறு­வ­னம் ஆறு வய­தி­லி­ருந்தே பிள்ளை­கள் துப்­பாக்­கிகளைப் பயன்­படுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தாக அந்த அறிக்கை தெரி­வித்­தது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஏழு சிறுவர், இளையர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப் படுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!