எந்த வழக்குப்போட்டாலும் எதிர்கொள்ள தயார் : ஸ்டாலின் ஆத்தூர்: "எந்த அவதூறு வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். திமுக பனங்காட்டு நரி. தலைவர் முதல் தொண்டன் வரை எந்த வழக்கானாலும் சந்திப்போம்," என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் வழியில் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
"அமைச்சர் உதயகுமார் அவதூறு வழக்குத் தொடர்ந் துள்ளார். எந்த அவதூறு வழக்குப் போட்டாலும் பயப்பட மாட்டோம். திமுக பனங்காட்டு நரி. தலைவர் முதல் தொண்டன் வரை எந்த வழக்கானாலும் சந்திப்போம். "மே மாதத்துக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமையும்," என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.