போப்பாண்டவரின் கருத்தைச் சாடிய டிரம்ப்

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் குடி­நுழை­வுக் கொள்கை­கள் பற்றிய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்­பா­ளராக விரும்பும் டொனால்ட் டிரம்ப்­பின் கருத்­து­களை 'கிறிஸ்­து­வர் அல்­லா­த­வ­ருடை­யவை' என்று போப்­பாண்ட­வர் ஃபி­ரான்­சிஸ் கூறி­யுள்­ளார். அதனை அடுத்­து தனது நம்­பிக்கை­மீது போப்­பாண்ட­வர் கேள்வி எழுப்­பி­யது 'வெட்­கக்­கே­டா­னது' என திரு டிரம்ப் கடிந்­துரைத்­துள்­ளார். தேசியக் கருத்து வாக்­கெ­டுப்­பில் குடி­யர­சுக் கட்­சி­யின் முன்னணி வேட்­பா­ள­ராக இருந்­து­வ­ரும் டிரம்ப், தாம் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் அமெ­ரிக்­கா­வுக்­கும் மெக்­சி­கோ­வுக்­கும் இடையில் சுவர் எழுப்பி சட்ட விரோதக் குடி­யேற்­றத்தை தடுக்­கப் போவ­தா­கக் கூறி­யி­ருந்தார். மெக்சிகோ சென்று திரும்­பும் வழியில் போப்­பாண்ட­வர் செய்­தி­யா­ளார்­களிடையே பேசுகை­யில், "பாலங்கள் கட்­டு­வதற்­குப் பதிலாக சுவர்­கள் எழுப்பு­வது பற்றி மட்டும் நினைப்­ப­வர் கிறிஸ்­த­வ ­ரல்­லா­த­வர்," என்று சொன்னார்.

பெரும் சொத்துச் சந்தை வர்த்­த­கப் புள்­ளி­யும் முன்னாள் தொலைக்­காட்­சிப் பிர­ப­ல­மு­மான டிரம்ப், "ஐஎஸ் அமைப்­பின் இறுதி இலக்­கான வத்தி­கன் நகர் அவ்­வமைப்­பால் தாக்­கப்­படும்­போது டொனால்ட் டிரம்ப் அதி­ப­ராக இருந்­தி­ருக்க வேண்டும் என போப்­பாண்ட­வர் நினைப்­பார்," என்று குறிப்பிட்டுள்ளார். "ஒரு­வ­ருடைய நம்­பிக்கை­மீது சமயத் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்­பு­வது வெட்­கக்­கே­டா­னது. நான் ஒரு கிறிஸ்­து­வ­ராக இருப்­ப­தில் பெருமை கொள்­கி­றேன். கிறிஸ்­து­வ­ம­தம் தாக்­கப்­படு­வதையோ அல்லது அது பல­வீ­ன­மடை­வதையோ ஒரு அதி­ப­ராக நான் அனு­ம­திக்க மாட்டேன்," என்றும் திரு டிரம்ப் கூறி­யுள்­ளார்.

போப்­பாண்ட­வர் ஃபி­ரான்­சிஸ், அதிபர் வேட்­பா­ளராக விரும்பும் டொனால்ட் டிரம்ப், படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!