பிரெஞ்சு அதிபருக்கு உயர் பாதுகாப்பு

புதுடெல்லி: வரும் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரெஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹொலாந்த் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போல் ஹொலாந்துக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக் கியது. மூன்று நாட்கள் நடந்த துப் பாக்கி சண்டையில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை யினர் எழுவர் வீரமரணம் அடைந்தனர். இதற்கிடையே, தீவிரவாதிகள் தலைநகர் டெல்லியில் ஊடுருவி இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல், ஐ.எஸ். தீவிரவாதிகளும் டெல்லிக்கு குறிவைத்து இருப்பதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!