‘தொண்டூழியர்களின் பங்களிப்புக்கு குடும்ப ஆதரவு இன்றியமையாதது’

வீ. பழனிச்சாமி

தொண்டூழியர்கள் தங்கள் சேவையை ஆற்றுவதற்கு முக்கிய ஆதரவு தருபவர்கள் அவர்களின் குடும்பத்தார். அவர்களின் ஆத ரவும் ஊக்கமும் இல்லாவிட்டால் தொண்டூழியர்கள் தங்கள் சேவையை முழுமனதுடன் வெளிக் கொணர முடியாது என்று தெரிவித்துள்ளார் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தனது குடும்ப தினத்தை நேற்று பாலஸ்டியர் ரோட்டில் அமைந்துள்ள 'சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்' திடலில் நடத்தியது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட திரு மெல்வின் யோங், "தொண்டூழியர் களின் அயராத உழைப்புக்கும் பங் களிப்புக்கும் நன்றி கூறும் வகை யில் குடும்ப தின நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக் குரியது," என்றார்.

ஆலய நிர்வாகம், தொண்டர்கள் அவர்களின் குடும்பத்தினர் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முதல் அங்கமாக 'குத்து ஃபிட்னஸ்' எனும் இசைக் கேற்ற உடற்பயிற்சி நடைபெற்றது.

விறுவிறுப்பான ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் ஆலயத்தின் தொண்டூழியர் குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பலத்தை வெளிப்படுத்தினர். படங்கள்: த.கவி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!