'சம்திங் ஸ்பெஷல்' என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல் லாம் ஒரு கட்டத்திற்கு மேல் 'ரொம்ப மோசம்' என்று கூறும் அளவுக்கு வந்தால் அதைத்தான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்களாம் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு இந்த நேரம் ஆரம்பித்துள்ளதாகவும் கூறுகின்றனர். எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றால் "ஆர்யாவும் நயன்தாராவும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினார்களாம்," என்று எழுதும் அளவுக்கு இருவர் நட்பும் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியது. ஆனால், இப்போது யார் கண்பட்டதோ, அந்த நட்பு உடைந்துவிட்டதாம்.
பழசை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு "மறுபடியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாமா?" என்று கேட்டாராம் ஆர்யா. நடிப் புலகில் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கும் ஆர்யாவுடன் இணைந்து நடித்தால் நம் நிலைமை என்னாவது என்று யோசித்த நயன்தாரா, "நிறைய படத்தில் ஒப்பந்த மாகிவிட்டேன். சுத்தமாக நேரமே இல்லை" என மறுத்துவிட்டாராம்.