மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர் சேர்ப்பு நிறுத்தம்

பங்­ளா­தே­சத்தவர்கள் உட்பட அனைத்து வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சேர்ப்பை­யும் நிறுத்த மலேசியா முடிவு செய்­துள்­ளது. 1.5 மில்­லி­யன் பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் மலே­சி­யா­வுக்கு வர­வி­ருப்­ப­தாக வெளி­வந்த செய்­தி­யால் ஏற்­பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது. இதனை அறி­வித்த மலே­சி­யத் துணைப் பிர­த­மர் அகமது சாகித் ஹமிடி, வெளி­நாட்டு ஊழியர் தீர்வைத் திட்டம் மறு­ஆய்வு செய்­யப்­படும்­ வரை இந்த நிறுத்­தம் நடப்­பில் இருக்­கும் என்றார். உள்ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­மாறு முத­லா­ளி­களைக் கேட்­டுக்­கொண்ட துணைப் பிர­த­மர், மலே­சி­யா­வில் தற்போது சட்ட விரோ­த­மா­கத் தங்­கி­யி­ருக்­கும் ஊழி­யர்­கள் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்டு பின்னர் அவ­ர­வர் நாடு­களுக்கு அனுப்­பப்­படு­வர் என்­பதை­யும் குறிப்­பிட்­டார்.

ஊழி­ய­ரணி பற்­றாக்­குறையைக் கருத்­தில்­கொண்டு வெளி­நாட்டு ஊழியர் சேர்ப்பு தொடர்­பான முடிவு எடுக்­கப்­படும் என மலே சியா குறிப்­பிட்­டது. வெளி­நாட்டு ஊழியர் தொடர்­பாக குறுகிய காலத்­துக்­குள்­ளா­கவே இரண்டா­வது முறை­யா­கக் கொள்கை மாற்­றத்தை அறி­வித்­துள்­ளது மலேசியா. பங்­ளா­தே­‌ஷிலிருந்து அடுத்த மூன்றாண் டுகளில் 1.5 மில்­லி­யன் ஊழி­யர்­கள் மலே­சி­யா­வில் வேலை செய்ய வகை செய்யும் புரிந்­ து­ணர்வு ஒப்­பந்தத்­தில், அந்­நாட்­டின் வெளி நாட்­ட­வர் நலன், வெளி­நாட்டு வேலை வாய்ப்பு அமைச்­சர் நூருல் இஸ்­லா­மும் மலேசிய மனித ­வள அமைச்­சர் ரிச்­சர்ட் ரியோட்­டும் கையெழுத்­திட்­ட­தாக பங்­ளா­தே­‌ஷின் டெய்லி ஸ்டார் பத்­தி­ரிகைச் செய்தி தெரி­வித்­தது. இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மனி­த­வள அமைச்­சர் ரிச்­சர்ட் ரியோட் 1.5 மில்­லி­யன் பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் மலே­சி­யா­வுக்கு வருவர் என்ற எண்ணம் தவ­றா­னது என்றார். மலேசியா, சிங்கப்­பூர், சவூதி அரேபியா உட்பட 139 நாடு­களில் வேலை செய்ய பதிவு செய்­துள்ள மொத்த பங்­ளா­தே­சத்தவர்களின் எண்­ணிக்கை அது எனக் கூறினார்.

நேற்று கையெ­ழுத்­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம், மற்ற நாடுகளுடன் முன்னர் செய்­யப் ­பட்­டுள்ள ஒப்­பந்தங்களைப் போன்ற ஒன்று தான். அ­தில் எந்த எண்­ணிக்கை­யும் குறிப்­பி­ட­வில்லை. தேவையைப் பொறுத்து அர­சாங்கம் பங்­ளா­தேஷ் ஊழி­யர்­களை வர­வழைக்­கும். 11வது மலே­சி­யத் திட்­டத்­தின்­படி அனு­ம­திக்­கப்­படும் மொத்த வெளி­நாட்டு ஊழியர் எண்­ணிக்கை, மொத்த ஊழி­ய­ர­ணி­யின் 15 விழுக்­காட்டைத் தாண்டக்­கூ­டாது என்று திரு ரியோட் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!