தமிழகத்தில் போராடும் அரசு ஊழியர்களுக்கு சலுகை

தமிழகம் எங்கும் தீவிரமடைந்து வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ஜெயலலிதா நேற்று அவர் அறிவித்தார். ஊழியர்களுக்கான குடும்ப நலநிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங் களின் பிரதிநிதிககளுடன் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்குப் பல் வேறு சலுகைகளை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 10ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழ கம் முழுவதும் மறியல் செய்து தினமும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைதாகிறார் கள். இவர்களுடன், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் கோட்டையை நோக்கி பேரணி, எனத் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அறிவித் திருந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா சலுகைகளை அறிவித்துள்ளதால் அரசு ஊழியர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் போராட்டத்தால் பல அரசு சேவைகள் பாதிக்கப்பட் டுள்ளன. தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் வழமையாக மேற்கொள்ளும் இந்தப் போராட் டம் குறித்து ஜெயலலிதா கடுமை யாக நடந்து கொள்ளதாதற்கு தேர்தல் ஆதாயமே காரணம் என அரசியல் கணிப்பாளர்கள் தெரி விக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!