வலிமையற்ற குழுவை சிட்டி களமிறக்குவது பெரும் தவறு

லண்டன்: செல்சிக்கு எதிராக இன்றிரவு நடைபெற இருக்கும் எஃப்ஏ கிண்ண ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர்களைக் களமிறக்கினால் அதுவே மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி மேனுவல் பெலகிரினி (இடது) செய்யும் மிகப் பெரிய தவறு என்று பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது நான்கு வெவ்வேறு போட்டிகளில் போட்டியிட்டு வரும் சிட்டிக்கு எஃப்ஏ கிண்ணத்தை வெல் லும் வாய்ப்பு மட்டுமே சற்று பிரகாசமாக உள்ளது. இதையும் கோட்டை விட்டால் இந்தப் பருவத்தில் சிட்டி வெறுங்கையுடன்தான் திரும்பக்கூடும்.

தமது ஆட்டக்காரர்கள் போதுமான ஓய்வின்றி அடுத்தடுத்து பல ஆட்டங் களை விளையாடி வருவ தாகக் குறைகூறிய பெல கிரினி இன்றைய ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரர்கள் பலரை களமிறக்கப்போவ தாக தெரிவித்துள்ளார். இந்தப் பருவத்தின் இறுதியில் பெலகிரினியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று முடிவாகியுள்ள நிலை யில் எஃப்ஏ கிண்ணத்தை வென்று தலைநிமிர்ந்து வெளியேறுவது சிட்டி உரிமையாளர்களுக்கு அவர் தரும் தகுந்த பதிலடியாக அமையும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!