டி20 உலகக் கிண்ணம்: நேரில் கண்ட ரசிகர்கள்

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தை சிங்கப் பூரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண வாய்ப்பு வழங்கும் வகை யில் மணிகிராம் நிறு வனம் கிண்ணத்தை சி ங் க ப் பூ ரு க் கு க் கொண்டு வந்துள்ளது. மணிகிராம் நிறுவனம் இவ்வாண்டு நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் அதிகார பூர்வ ஆதரவாளர் என் பது குறிப்பிடத்தக்கது. கிண்ணத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட் டிருந்த சுற்றுலா காலாங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுக் காலை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து யோர்க்கர் கிளப்பிலும் பொங் கோலில் உள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதி ஒன்றிலும் கிண்ணச் சுற்றுலா நடை பெற்றது. கிண்ணத்தைக் காண மைதானத்தில் திரண் டிருந்த கிரிக்கெட் ரசிகர்களும் சிறுவர்களும் அதனருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வரவேற்கப்பட்டனர். இந்த நிகழ்வுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் நட்சத்திரமும் இந்திய பிரிமியர் லீக்கில் போட்டியிடும் ஓர் அணியின் தற்போதைய பயிற்று விப்பாளருமான ராபின் சிங், மணிகிராம் நிறுவனத்தால் வர வழைக்கப்பட்டார். ராபின் சிங்கை நேரில் கண்டு பேச சிங்கப்பூரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது. கிண்ணத்தைப் பார்ப் பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவில் கலந்துகொண் டோருக்கு டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு களையும் ரொக்கப் பரிசுகளையும் வெல்ல வாய்ப்புகள் வழங்கப் பட்டன.

ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துடன் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் ராபின் சிங். படம்: மணிகிராம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!