பொன்னார்: தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியது

சிவகாசி: கடந்த ஐம்பது ஆண்டு களாக தமிழகத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். சிவகாசியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், வரும் தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடமாட்டார் என்றும் அத் தகைய முடிவால் மூழ்கிய கப்ப லுக்கு கேப்டனாக இருக்க அவர் விரும்பமாட்டார் என்றும் தெரிவித் தார். "தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். பொருளாதா ரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு, கல்வித்துறை என அனைத்துத் துறைகளிலும் உடனடியாக மாற்ற மும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

"அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ கத்தில் கடந்த ஐம்பது ஆண்டுக ளாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை," என்றார் பொன். ராதா கிருஷ்ணன். மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறவேண்டு மெனில் நல்லாட்சி அமைய வேண் டும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக பாஜக தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வருவதாகக் கூறி னார். "வரும் தேர்தலில் அனைத்துத் கட்சிகளும் தனித்துப் போட்டியிட் டால் பாஜகவும் தனித்துப் போட்டி யிடும். எனினும் இம்முறை தேமுதிக தனித்துப் போட்டியிடாது என நம்புகிறோம். அக்கட்சி மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களுக்குள் தெளிவான அறி விப்பு வெளியிடப்படும்," என்று பொன். ராதாகிருஷ்ணன் சிவகாசி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!