கருத்துக் கணிப்புகளை புறக்கணிக்கும் பாமக

ஈரோடு: மக்களை ஏமாற்றவே தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளி யிடப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். ஈரோட்டில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இப்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.

திமுக=காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அது பலவீனமான கூட்டணி என்றும் பலவீனமானவர்கள் ஒன்றாகச் சேர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். "அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு வாக்குறு திகளை அளித்தது அதிமுக அரசு. ஆனால் அவற்றில் எதை யுமே நிறைவேற்றவில்லை. இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றிவிட்டது," என்று ராமதாஸ் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!