மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்திய ‘பிஐஓ’ அட்டை செல்லாது

தமிழவேல்

இந்தியாவுக்கான 'பிஐஓ' எனப்படும் இந்திய வம்சாவளியினர் விசா அட்டை மார்ச் மாதத்திற்குப் பிறகு செல்லாது. தற்போது 'பிஐஓ' அட்டை வைத்திருப்போரை 'ஓசிஐ' எனப் படும் வெளிநாடுவாழ் இந்தியர் விசா அட்டைக்கு மாறும்படி சிங்கப்பூர் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 'பிஐஓ' விசா அட்டை வைத்திருப்போர் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்குச் செல்ல வழக்கமான இந் திய பயண விசா பெறவேண்டும். அல்லது புதிதாக 'ஓசிஐ' விசா அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அதற்கான கட்டணம் கிட்டத்தட்ட $330.

எனினும் 'பிஐஓ' அட்டை வைத்திருப்போர் 'ஓசிஐ' விசா அட்டைக்கு மாற இறுதி நேரம் வரை காத்திருக்காமல் உடனே இந்தியத் தூதரகத்தில் விண்ணக் கும்படி கேட்டுக்கொள்ளப் படுகின் றனர். வரும் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தச் சேவையை இலவசமாகப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகப் பேச்சா ளர் தெரிவித்தார். வழக்கமாக 'ஓசிஐ' விசா அட்டை இந்தியாவிலிருந்து சிங்­கப்பூர் தூதரகத்திற்கு வர ஒரு மாதத்திலிருந்து இரண்டு மாதங் கள் வரை எடுக்கும். தற்போது சில இந்திய விமான நிலையங்களில் 'பிஐஓ' விசா அட்டையை ஏற்க மறுத்து வழக்கமான இந்திய விசா எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி வருவதாக அங்கு அண்மையில் பயணம் சென்றோர் தமிழ் முரசிடம் பகிர்ந்து கொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!