‘ஒருங்கிணைந்து புற்றுநோயை விரட்டுவோம்’

புற்றுநோய் பற்றி விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­தும் வகை­யில் பிப்­ர­வரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தின­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­படு­கிறது. அது தொடர்­பாக உல­கம் முழு­தும் இந்த மாதம் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் சோதனை முகாம்­களும் நடத்­தப்­படு­கின்றன. அவ்­வகை­யில் சிங்கப்­பூ­ரில் நேற்று தோ பாயோ வீவக மையத்­தில் புற்­று­நோய் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­ நடை­பெற்­றது. இந் நிகழ்ச்­சி­யில் ஏரா­ள­மா­னோர் கலந்துகொண்ட­னர். சிங்கப்­பூர் புற்­று­நோய் சங்கம், சிங்கப்­பூர் தேசிய புற்­று­நோய் மையம், தேசிய பல்­கலைக்கழக புற்­று­நோய்க் கழ­கம் ஆகி­யவை சுகா­தார மேம்பாட்டு வாரி­யத்­தின் ஆத­ர­வில் இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தன.

வாழ்க்கைப் பாணி, ஆரோக்­கி­ய­மான உணவு, புற்­று­நோய் வரு­வ­தற்­கான காரணிகள், பெண்­கள் தொடர்­பான புற்­று­நோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகி­யவை பற்றி நிகழ்ச்­சி­யில் சிறப்பு மருத்துவர்கள் விளக்கினர். இந்­நி­கழ்ச்­சி­யில் சிறு­வர்­களுக்­கான ஓவி­யப்­போட்டியும் நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 12 வயது வரை­யி­லான குழந்தை­கள் கலந்­து­கொண்டு திறமையை வெளிப்­படுத்­தி­னர். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோ பாயோ வீவக மையத்தில் நேற்று நடந்த முகாமில் பெருங்குடல் புற்று நோய் உள்ளதா என அறிந்துகொள்ள தேவையான மலச்சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர் வருகையாளர்கள்.

படம்: புற்று நோய் விழிப்புணர்வு முகாம் ஏற்பாட்டாளர்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!