புக்கிட் பாத்தோக் கால்வாய் புதுப் பொலிவு

புக்­கிட் பாத்­தோக் கால்­வா­யில் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் துடிப்­பான, அழ­கான, தெளிந்த நீர்­நிலையை நேற்று சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சின் மூத்த துணை அமைச்­ச­ர் டாக்­டர் ஏமி கோர் அதி­கா­ர­பூர்­வ­மாக திறந்து வைத்­தார். இதன்­மு­லம் புக்­கிட் பாத்­தோக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் நீர்­நிலை ஓரங்களில் அழ­கிய ஓவி­யங்கள், அங்கு அமர்ந்து இயற்கையை ரசிக்க மர இருக்கை­கள் ஆகி­ய­வற்­­­றுடன் கண்­ணுக்­குக் குளிர்ச்சி தரும் நீர்த்தோட்டங்கள் போன்ற வற்றை தங்களுக்கு அரு­காமை­யி­லேயே பெற்­றுள்­ள­னர். புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 2, 4 வழியே செல்­லும் இந்த 230 மீட்டர் நீளக் கால் வாய்க்கு புத்­து­யி­ரூட்­டப்­பட்­டுள் ளது. வெறும் நீர்­நிலை­யாக மட்­டுமே இருந்த இந்தக் கால்­வாய் தற்­பொ­ழுது அதன் சுவர்­களில் அழ­கிய பூக்கள், செடி­களைத் தாங்கி வரு­கின்றது.

அத்­து­டன், மழை நீரை வடி­கட்­டிய நிலை­யில் கால்­வாய்க்­குள் செல்­லும் வித­மாக நான்கு நீர்த் தோட்டங்கள் இங்கு அமைந்­தி­ருப்­பது கண்­ணுக்­குக் குளிர்ச்­சி­யா­க­ வும் உள்­ளது. இந்த நீர்­நிலைக்கு புதிய எழில் தோற்றம் கொடுக்­கும் விதத்­தி­லும் நண்­பர்­கள், அக்­கம்பக்­கத்­தார் உட்­கார்ந்து அள­வ­ளா­வ­வும் இங்கு மரத்­தினா­லான இருக்கை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இது­பற்­றிக் கூறும் பொதுப் பய­னீட்­டுக்­க­ழ­கத்­தின் தலைமை மீள்­தி­றன் அதி­கா­ரி­யான டான் ஙுவான் சென், "குடி­யி­ருப்­புப் பகு­தி­யின் மையத்­தில் உள்ள புக்­கிட் பாத்­தோக் கால்­வாய் கிராஞ்சி நீர்த்­தேக்­கத்­திற்கு நீரைக் கொண்டு செல்­லும் கால்­வாய் மட்­டு­மல்ல. இந்த நீர்­நிலையை நாங்கள் சீர்­படுத்தி துடிப்­பான, அழ­கான, தெளிந்த நீர்­நிலை­யின் பலன்களை இங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனு­ப­விக்­கும் விதத்­தில் இதை புன­ரமைப்பு செய்­தி­ருக்­ கி­றோம். "இங்­குள்­ள­வர்­கள் இங்கு ஒன்­று­கூடி இந்த நீர்­நிலை­யின் எழிலைக் கண்­டு­களிக்­கும் அதே­நே­ரத்­தில் இதன் மதிப்பை உணர்ந்து நீர்­நிலை­களை குப்பை களில்­லா­மல் சுத்­த­மாக வைத் திருக்க உத­வு­வார்­கள் என்று நம்­பிக்கை­யு­டன் இருக்­கி­றோம்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!