தொண்டர்கள், முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு விருதுகள்

முஹம்மது ஃபைரோஸ்ஈ

இந்திய முஸ்லிம் சமூகம் தனித் துவம் வாய்ந்த சமூகம் என்றும் முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லா மிய சமய மன்றத்துடனும் இதர முஸ்லிம் அமைப்புகளுடனும் இந் திய முஸ்லிம் சமூகம் ஒன்றி ணைந்து செயல்பட்டு ஒட்டுமொத்த சமூகமும் சந்திக்கும் பிரச்சினை களை எதிர்கொண்டு வருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்துள் ளார். இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் களிலும் மற்ற பள்ளிவாசல்களிலும் நடத்தப்படும் மதரஸா வகுப்புக ளின் பாடத்திட்டத்துக்கு இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் சிறந்த செயல்முறைகளைப் பகிர்ந்து கொள்வதாலும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக் கொள்வதாலும் முஸ்லிம் சமூக மாக முன்னெடுத்துச் செல்ல முடி யும் என்றும் அவர் கூறினார்.

முயிஸ் வளாகத்தில் நேற்று நடந்தேறிய பென்கூலன் பள்ளி வாசல் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சருமான டாக்டர் யாக்கூப், செய்தியாளர் களிடம் இவ்வாறு தெரிவித்தார். "எந்தவொரு சவாலையும் சந்திக்க நேரிடும்போது, ஒட்டு மொத்த சமூகமாக ஒன்றுசேர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம்," என்ற அவர், பள்ளிவாசல்களில் மதரஸா வகுப்புகளை ஏற்று நடத்த நிறைய இளையர்கள் முன்வருவது சமூகம் வலுவடைவதைப் பிரதி பலிப்பதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் (இடமிருந்து 3வது) விருது பெற்ற தொண்டர்களுடன் உரையாடுகிறார். இடமிருந்து 4வதாக நிற்பவர் பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முஹம்மது அப்துல் ஜலீல். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!