அதிமுக கூட்டணி: விலகுவதாக சரத்குமார் அறிவிப்பு

நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை தன்னை கறிவேப்பிலையைப் போன்று பயன்படுத்திக் கொண்டது என குற்றம்சாட்டி உள்ளார். நேற்று முன்தினம் கூட அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்புவதாகவும் 234 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டி யிடுவதாக தகவல் வெளியா னதாலேயே தாமும் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண் டிய கட்டாயத்துக்கு ஆட்பட் டுள்ளதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கள் கூட்டம் நேற்று நாகர் கோவிலில் நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார். "அதிமுக தலைமை கூட் டணி தர்மத்தை கடைப்பிடிக்க வில்லை. என்னை அக்கட்சி கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது. தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி, இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை," என்றார் சரத்குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!