தேர்தல் கூட்டணி: மீண்டும் குழப்பினார் விஜயகாந்த்

காஞ்சிபுரம்: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த தனது முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரம் மாநாட்டில் அறிவிப்பார் என்ற பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. திமுக, அதிமுகவின் செயல் பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வேறு எந்தக் கட்சி குறித்தும் நல்லவிதமான கருத்துகளையும் கூறவில்லை. எனவே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது தொடர்பில் குழப்பம் மட்டுமே நீடிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வேடல் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாட்டில் பேசிய அவர், தாம் அரசனாக (கிங்) இருக்கவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றார். மேலும், யாருடனும் கூட்டணி வைக்கத் தேவையில்லை என கட்சித் தொண்டர்கள் கருதுவ தாகவும் அவர் கூறினார். அவருக்கு முன்னதாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக குறித்து சரமாரியான குற்றச்சாட்டு களை முன்வைத்தார்.

மதுக்கடை களைத் திறந்து வைத்து பல குடும்பங்களை அழித்ததுதான் அதிமுக அரசின் சாதனை என்றும் அதிமுகவின் ஸ்டிக்கர் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் அவர் ஆவேசத்துடன் குறிப்பிட்டார். "அரசர்களை உருவாக்குபவ னாக (கிங் மேக்கர்) அல்லாமல், நான் அரசனாக (கிங்) இருக்க வேண்டும் என்றே தொண்டர்கள் விரும்புகிறார்கள். நான் அரசனாக இருந்தால் தொண்டர்களும் அதே போல் இருப்பார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!