ஒற்றுமையில் ஒளிர்ந்த ஊர்வலம்

சுதாஸகி ராமன்

சிங்கப்­பூ­ரின் பண்­பு­நெ­றிகளை எடுத்து இயம்புவதோடு ஒளி­ம­ய­மான சிங்கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை­யும் எடுத்­துக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த ஆண்டின் சிங்கே சாலை ஊர்­வ­லத்­தின் தொடக்­க­ விழா சிங்கப்­பூ­ரர்­களின் ஒன்­று­பட்ட உணர்வை­யும் அதன் பலத்தை­யும் எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வும் அமைந்தது. நாட்டின் பிர­த­மர் லீ சியன் லூங் உட்பட பல ஆயிரம் பார்வை­யா­ளர்­களும் கலை­ஞர்­களும் கொட்டிய மழையைத் துச்­ச­மெ­னத் தட்­டி­விட்டு, உற்­சா­கத்­தோடு இந்த ஆண்டு ஊர்­வ­லத்தைக் கொண்டா­டி­னர். -மழை ஆடை அணிந்து ஆடி, பாடி நிகழ்ச்­சி­களைப் படைத்­த­னர் 8,000க்கும் மேற்­பட்ட கலை­ஞர்­கள். கரவொலி எழுப்­பி­யும் வண்ண விளக்­கு­களை அசைத்­தும் பங்­கேற்­பா­ளர்­களுக்கு உற்­சா­க­மூட்டி அணி­வ­குப்பை ரசித்­த­னர் பார்வை­யா­ளர்­கள்.

வெள்ளிக்கிழமை மாலை கொட்டிய மழையைத் தாண்டி, எழுந்த பல வண்ண விளக்­கொளி நிகழ்ச்சி நடை­பெற்ற 'எஃப்1' கார் பந்தய வளாகக் கட்­ட­டத்தை ஒளி­வெள்­ளத்­தில் நிறைத்து, இரவைப் பகலாக்கியது. பச்சை, வெள்ளை, தங்க நிறங்க­ளா­லான கடல்­நாக வடிவ மிதவை­யில் மழை ஆடை அணிந்து துணை­வி­யார் ஹோ சிங்­கு­டன் வந்த பிர­த­மர் லீ சியன் லூங் கொண்டாட்ட மகிழ்ச்­சி­யில் திளைத்­தார். சிங்கப்­பூ­ரின் பல்லின சமூ­கத்தைக் கொண்டா­டும் நோக்­ கி­லும் சீனப் புத்­தாண்­டுக் கொண்டாட்­ட­மா­க­வும் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­ற்று வரும் 'சிங்கே' சாலை அணி­வ­குப்­பில் இவ்­வாண்டு சீனா, ரஷ்யா, இந்­தோ­னீ­சியா, தென் கொரியா போன்ற நாடு­களைச் சேர்ந்த 800க்கும் மேற்­பட்ட கலை­ஞர்­கள் தங்கள் கலா­சா­ரங்களை வெளிப்­படுத்­தும் வகையில் பல்வேறு நட­னங்களைப் படைத்தனர்.

'மாய விளக்கு' எனும் இந்திய நடனம் விளக்கொளியின் அழகை எடுத்துக் காட்டியது. மக்கள் கழக நற்பணிப் பேரவை, இந்தியர் நற்பணி செயற் குழுக்கள், 'மணிமாறன் கிரியேஷன்ஸ்', யுவபாரதி அனைத்துலகப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தோர் பங்கேற்ற இந்த அங்கத்தை பிரபல நடனக் கலைஞர் து.மணிமாறன் வடிவமைத்துள்ளார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!