சிறப்பான பந்துவீச்சு; இந்தியா அபார வெற்றி

பெர்த்: மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பந்தடித்த இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 249 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோகித் சர்மா 67 ஓட்டங்களும் ரகானே 41 ஓட்டங்களும் மணீஷ் பாண்டே 58 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கு ஆஸ்திரேலியா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் போர்ட்டர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 250 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு ஆஸ்திரேலியா அணி பந்தடித்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் களின் நேர்த்தியான பந்துவீச்சால் அந்த அணியால் ஓட்டங்கள் குவிக்க இயலவில்லை. தொடக்க வீரர் போஸிஸ்டோவை உமேஷ் யாதவ் 13 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

அடுத்து வந்த ஷார்ட்டை 10 ஓட்டங்களில் அஸ்வினும், காப்சனை 4 ஓட்டங் களில் வேகப்பந்து வீச்சாளர் ரி‌ஷி தவானும் வெளியேற்றினார்கள்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் விக்கெட்டைச் சாய்த்த இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (வலமிருந்து இரண்டாவது) படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!