தொழில்நுட்பத் திறன் வளர்ப்பு வகுப்புகள் நடத்த ஒப்பந்தம்

நவீன தொழில்நுட்பங்களில் தங் களது திறன்களை வலுப்படுத்திக் கொள்ள விரும்பும் தயாரிப்புத் துறை ஊழியர்கள் இந்த ஆண்டில் அறிமுகம் காணவிருக்கும் புதிய தொடர் நடவடிக்கைகளில் பங்கேற் கலாம். அவசிய வகுப்புகள், பட்டறை கள், மாநாடுகள் போன்றவற்றில் அவர்கள் பங்கேற்றுப் பயனடைய லாம்.

நவீன தயாரிப்புத் துறை தொடர் நடவடிக்கைகள் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இவை நவீன எந்திர மனித செயல்கள், தானியக்கம், சேர்மானத் தயாரிப்பு, ஒளியியல் மற்றும் ஒளிக்கதிர் பொறியியல் போன்றவற்றை சொல்லித் தரும். சிறிய நிறுவனங்கள், பன் னாட்டுக் கழகங்கள் போன்ற வற்றைச் சேர்ந்த 400க்கு மேற்பட்ட தொழில்நுட்ப மேலாளர்கள், பொறி யாளர்கள், உதவிப் பொறியாளர்கள், பொருள் வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகி யோர் இத்தொடர் நடவடிக்கை களில் பங்கேற்கத் தகுதி பெறுவர். திறன்வளர்ப்பு பாடங்களை நடத்தவிருக்கும் ஐந்து கல்விக் கழகங்கள் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத் திட்டன.

நவீன மறுதயாரிப்பு தொழில்நுட்ப நிலையத்தில் நேற்று நடைபெற்ற பட்டறைக்கு வருகையளித்த வர்த்தக, தொழில், கல்வி அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி லோ யென் லிங் சில தயாரிப்புகளைப் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!