ஃபிஜியில் கடும் சூறாவளி

ஃபிஜி தீவில் ஞாயிற்றுக் கிழமை வீசிய கடும் சூறாவளிக் காற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அவசரமாக அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சூறாவளி காரண மாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதால் விமான நிலையங்களில் பரபரப்பு நிலவுகிறது. சூறாவளிக் காற்றில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித் துள்ளனர். ஃபிஜி தீவுப் பகுதியில் மணிக்கு 325 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றி னால் பலத்த சேதம் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சூறாவளி காரணமாக பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி கூறி னார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஃபிஜி தீவில்​ வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து வீட்டுக் கூரை மீது விழுந்ததில் அந்த வீடு பலத்த சேதம் அடைந்தது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!