பிரிட்டிஷ் பிரதமருக்கு பெரும் பின்னடைவு

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலகுவதை தாம் ஆதரிப்பதாக லண்டன் மேயரும் பிரிட்டனில் அதிக செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவருமான போரிஸ் ஜான்சன் தெரிவித் துள்ளார். மறுசீரமைக்கப்பட்ட ஐரோப் பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆதரித்து பிரசாரம் செய்யவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அறி வித்துள்ள வேளையில் லண்டன் மேயர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருப்பது குறித்து மக்களின் கருத்தை அறிய வரும் ஜூன் 23ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று திரு டேவிட் கேமரன் அறிவித்த இரு நாட்களில் போரிஸ் ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித் துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை திருப்திப்படுத்தும் அளவிற்கு பிரசல்ஸ் மாநாட்டில் இணக்கம் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதைவிட சிறந்த உடன்பாட்டை தாம் விரும்புவதாகவும் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.

லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் தமது வீட்டுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!