சோழ, பல்லவ வரலாற்றைச் சித்திரிக்கும் ‘விக்ரமன்’

சோழ, பல்லவ வரலாற்றைச் சித்திரிக்கும் 'விக்ரமன்' நாடகத் தயாரிப்பில் ஆர்வம் மிகுந்த இளம் குழுவினர் சிலரின் கைவண்ணத்தில் 'விக்ரமன்' எனும் தலைப்பிலான தமிழ் மேடை நாடகம் அரங்கேறவுள்ளது. புகழ்பெற்ற நாவலாசிரியர் கல்கி எழுதிய 'பார்த்திபன் கனவு' என்ற பிரபல நாவலை அடிப் படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள், எழுத்து, பேச்சுத் தமிழ் புழக்கத்தைப் பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும்விதத்தில் கையாள வுள்ளனர். இதன் மூலம் தமிழ் மொழியின் எழிலையும் பார்ப்பவர்கள் ரசிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், இளையர்களிடையே தமிழ்ப் புத்தகங்கள், இலக்கணத்தைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் நாடகம் இலக்காகக் கொண் டுள்ளது. கதைச் சுருக்கம்: சோழ நாட்டு அரசன் பார்த்திபனின் மகன் விக்ரமன், பல்லவ நாட்டு ஆட்சி யாளர் நரசிம்மவர்மனிடமிருந்து சுதந்திரம் பெற முற்படுகிறார். இதற்கிடையே, பல்லவர்களிடம் வரி செலுத்த மறுக்கிறார் பார்த்திபன்.

இதன் காரணத் தினால் சோழர்களுக்கு எதிராக பல்லவர்கள் போர் தொடுக் கின்றனர். போரில் பார்த்திபன் கொல்லப்படுகிறார். விக்ரமன் வளர்ந்து பெரிய ஆளானதுடன் நரசிம்மவர்மனைப் பழிதீர்க்க திட்டம் தீட்டுகிறார். ஆனால் விக்ரமன் கைது செய்யப்பட்டு வெகுதூரத்தில் உள்ள ஒரு கண்காணாத தீவுக்கு அனுப்பப்படுகிறார். தம் தாயாரையும் தாம் ரசிக்கும் அழகி குந்தவியையும் பார்க்க ஏங்கும் விக்ரமன் நாடு திரும்புகிறார்.

இடம்: பிளேக் பாக்ஸ், குட்மேன் ஆர்ட்ஸ் சென்டர் நேரம்: இம்மாதம் 26, 27ஆம் தேதி இரவு 7 மணி டிக்கெட்டுகள் விலை: பெரியவர்களுக்கு $20, மாணவர்களுக்கு $18 தொடர்புக்கு: கணேசன்- 9106 7169

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!