சிட்டியை ஊதித் தள்ளிய செல்சி

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியிலிருந்து மான் செஸ்டர் சிட்டி மிகவும் மோசமான வகையில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 5=1 எனும் கோல் கணக்கில் அது செல்சியால் பந்தாடப்பட்டது. இந்தப் படுமோசமான தோல் விக்கு சிட்டி நிர்வாகி மேனுவல் பெல்லகிரினி எடுத்த முடிவுகளும் வகுத்த வியூகமும்தான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் நெருங்குவதால் நட்சத்திர வீரர் களுக்கு ஓய்வு கொடுத்து செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் மாற்று ஆட்டக்காரர்களை அவர் களமிறக்கியதே சிட்டியின் அவல நிலைக்கு வித்திட்டதாக சிட்டி ரசிகர்கள் கடிந்துகொள் கின்றனர்.

செல்சியின் அரங்கில் நடை பெற்ற ஆட்டத்தை நேரில் கண்டு தங்கள் குழுவுக்கு ஆதரவு வழங்க ஏறத்தாழ 700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து லண்டன் வந்திருந்த சிட்டி ரசிகர்களுக்கு பெல்லகிரினி துளியளவும் மரியாதை கொடுக்காமல் மாற்று ஆட்டக்காரர்களை பலி ஆடு களாக அனுப்பியதாகக் கூறப்படு கிறது.

செல்சியின் டியேகோ கோஸ்டா (வலது) பாய்ந்து தலையால் முட்டிய பந்து வலைக்குள் போவதைத் தடுக்க சிட்டியின் கோல்காப்பாளர் கபல்லேரோ எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. செல்சியின் இந்த முதல் கோலுக்குப் பிறகு சிட்டி ஆட்டத்தைச் சமன் செய்தபோதிலும் பிற்பாதியில் சிட்டியின் புயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதன் ஆட்டக்காரர்கள் பரிதவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!