விஜயகாந்த் வருகைக்காக ஆர்வம் காட்டும் காங்கிரஸ்

சென்னை: திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறவேண்டும் என்பதில் தமி ழகக் காங்கிரஸ் ஆர்வமாக உள் ளது. இந்த விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன். சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகப் பேசிய அவர், கூட்ட ணியில் இணையுமாறு விஜய காந்திடம் வலியுறுத்த உள்ளதா கவும் அவரது வீட்டிற்கே நேரடி யாகச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே முதல்வர் வேட்பாளர் குறித்து காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் ஏதும் கூற வில்லை எனச் சுட்டிக்காட்டினார். "காஞ்சிபுரம் மாநாட்டிலும் கூட்டணி குறித்த தனது முடிவை விஜயகாந்த் அறிவிக்கவில்லை. மேலும் முதல்வர் வேட்பாளர் குறித்தும் வெளிப்படையாக அவர் ஏதும் சொல்லவில்லை. எனவே அவரது முடிவு குறித்து இப்போதே கருத்துரைப்பது சரியாக இருக்காது. "என்னைப் பொறுத்தவரையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவும் சேரவேண்டும். இதை வலியுறுத்தவும் கூட்டணியில் சேரவும் விஜயகாந்தின் வீட் டிற்கே சென்று பேசவும் அழைப்பு விடுக்கவும் தயாராக உள்ளேன்," என்றார் இளங்கோவன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!