சென்னை: அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கேகூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளதாக ஆர்.கே. நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் புகார் எழுப்பினார். "நடப்பு அதிமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரங்களின்படி தமிழகத் தில் கடந்த 44 மாதங்களில் 7,805 கொலைகளும் 79,305 கொள்ளைகளும் நிகழ்ந்துள்ள தாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேசிய அளவில் பாதுகாப்பற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தையும் சேர்த்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். இங்கு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக காவல்துறை அதிகாரிகளுக்கும் கூட பாது காப்பு கிடையாது," என்றார் கனிமொழி. தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் என்பது அறவே இல்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையில் பேசமுடியவில்லை என்றார். 'அம்மா போற்றி', 'ஆதிபரா சக்தி போற்றி' என்று முதல்வரைப் புகழ்பாடுவதிலேயே அதிமுகவினர் முனைப்பாக உள்ளதாகவும் அத னால் சட்டப்பேரவை முதல்வரின் புகழ்பாடும் மன்றமாகவே மாறி விட்டதாகவும் அவர் விமர்சித்தார். "பேரவையில் 110 விதிகளின் கீழ் திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். ஆனால், அவற்றை நிறைவேற்றுவது கிடையாது. முதல்வர், அமைச்சர்கள் உள் ளிட்ட அனைவரும் பொய்யான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.