கார்த்தி படத்தில் நவீன தொழில்நுட்பம்

'கொம்பன்' படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் 'காஷ்மோரா' படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தியின் ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு நாயகிகள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் '3டி பேஸ் ஸ்கேன்' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக்கிய காட்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை இதற்குமுன் ரஜினி நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' படத்திலும் சூர்யா நடிப்பில் வெளியான 'மாற்றான்' படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி பல்வேறு தோற்றங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிகையாளராகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்காக பிரம்மாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!