வெயின் ரூனியின் கோல்

லண்டன்: ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது மான்செஸ்டர் யுனைடெட்டுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அணித் தலைவர் வெயின் ரூனி போட்ட கோல் அக்குழுவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. ரூனி இந்தக் கோலைப் போடாமல் இருந்திருந்தால் மூன்றாம் நிலை லீக்கில் விளை யாடும் ஷெஃபீல்ட் வெட்னஸ்டே குழுவுடன் சமநிலை கண்ட தலைக்குனிவுடன் யுனைடெட் ஆட்டக்காரர்கள் திடலைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் ரூனி போட்ட கோல் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் எஃப்ஏ கிண்ண ஆட்டத்தை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. யுனைடெட் ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாததால் அக் குழுவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆட்டத்தின் 69வது நிமிடத் தில்தான் யுனைடெட்டால் எதிரணியின் வலை நோக்கிப் பந்தை முதல்முறையாக அனுப்ப முடிந்தது.

அதனை அடுத்து, கோல் போடும் வாய்ப்புகள் இல்லாமல் அக்குழு திணறியது. இந்நிலையில் ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது பெனால்டி எல்லையில் ஷெஃபீல்ட் வெட்னஸ்டே ஆட்டக்காரர் புரிந்த தப்பாட்டத்தினால் யுனைடெட் டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத் தது. யுனைடெட் குழுவுக்கு எளிதில் வளைந்து கொடுக்காமல் போராடிய ஷெஃபீல்ட் வெட்னஸ்டே ஆட்டக்காரர்களை வெகுவாகப் பாராட்டினார் அக்குழுவின் நிர்வாகி நைஜல் எட்கின்ஸ்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் வெயின் ரூனி (நடுவில்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!