சேதுபதிக்கு இயக்குநர் தந்திருக்கும் புதிய பட்டம்

சீனு ராமசாமி இயக்கிய 'தென் மேற்கு பருவக்காற்று' படம் மூலம் புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி. இப்படம் அவருக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந் தது. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் நடித்திருந்தார் சேதுபதி. படம் குறித்த எதிர் பார்ப்பு விநியோகஸ்தர்கள் மத்தி யிலும் ரசிகர்களிடமும் அதிகமா கவே இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. சில காரணங்க ளால் அப்படம் முடங்கிக் கிடக்கி றது. இத்தனை பிரச்சினைக ளுக்கும் தீர்வு காணப்படும் பட்சத்தில், தனக்கு சில நாட்கள் அவகாசம் அளித்தாலே போதும், படத்தை வெளியிட்டுவிடலாம் என்கிறார் சீனு ராமசாமி. ஆனால் தீர்வுதான் வந்தபாடில்லை. போகட்டும், நடப்பு விஷயத் துக்கு வருவோம். தனது செல்ல நடிகரான விஜய் சேதுபதியை வைத்து அடுத்து 'தர்மதுரை' என்ற புதுப் படத்தை உருவாக்கி வருகிறார் சீனு.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப் பாக நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல் வன்' என்ற பட்டத்தை சீனு ராம சாமி கொடுத்துள்ளாராம். படம் வெளியாகும் போது 'மக் கள் செல்வன்' விஜய் சேதுபதி என்று திரையில் பளிச்சிடுமாம். இப்படத்தில் தமன்னா, ஐஸ் வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரித்து வருகிறார்.

'தர்மதுரை' படப்பிடிப்பில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, தமன்னா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!