வேலை தேடுவோரைக் கவர்பவை சம்பளம், சலுகைகள்

சிங்கப்பூரில் வேலை தேடுவோரில் 43 விழுக்காட்டினரை சம்பளமும் சலுகைகளும் கவர்ந்துள்ளன. 60 விழுக்காட்டினர் ஒரு வேலையில் நிலைத்து நிற்க வேலை=வாழ்க்கை சமநிலையை முக்கியமாகக் கருது கிறார்கள். 'ஹேய்ஸ்' எனும் உலகளாவிய ஆட்சேர்ப்பு நிறுவனம் அண்மை யில் நடத்திய ஆசிய சம்பள வழிகாட்டி ஆய்வு ஒன்றில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. சீனா, ஹாங்காங், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு களைச் சேர்ந்த 3,000 முதலாளிக ளும் சுமார் ஆறு மில்லியன் ஊழி யர்களும் ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் 37 விழுக்காட்டி னர் சிங்கப்பூரில் வேலை தேடி வருபவர்கள். 48 விழுக்காட்டினர் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் கிட்டுமா என்று காத்திருப்போர்.

சுமார் 30 விழுக்காட்டினர் அடுத்த ஆறு மாதங்களில் வேலையில் புதிய மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் பிரிவினர். 22 விழுக்காட்டினர் அடுத்த ஓராண்டுக்குள் வேலை மாற் றத்தை எதிர்பார்த்திருப்போர் என்றும் ஆய்வு கூறுகிறது. "ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் புதிய வேலையை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில், அவர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் வழி களை முதலாளிகள் யோசித்து பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது," என்று தெரிவித்தார் 'ஹேய்ஸ் சிங்கப்பூர்' நிறுவன நிர்வாக இயக்குநர் லின் ரோடர்.

சிங்கப்பூரில் வேலை தேடு வோரை ஆக அதிகம் கவர்பவை யாக சம்பளமும் சலுகைகளும் (43%) உள்ளன. அடுத்தடுத்த நிலைகளில் தற்போதைய வேலை யிலிருந்து பதவி உயர்வு 36%, புதிய சவால்கள் கொண்ட வேலையை எதிர்பார்த்திருத்தல் 36%, நிர்வாகப் பாணி அல்லது நிறுவன கலாசாரம் 29%, பயிற்சி அல்லது மேம்பாட்டு வாய்ப்புகள் பற்றாக்குறை 29%, வேலைப் பாதுகாப்பு 26%, புதிய சவால்கள் 23% ஆகியவை உள்ளன என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!