நாடு கடத்தப்பட்ட நால்வரிடம் இந்தோனீசியா விசாரணை

ஜகார்த்தா: ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு இந்தோனீசியர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதைத் தொடர்ந்து இந்தோனீசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த நால்வரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையை அந்த நால்வர் ஐஎஸ் குழுவை ஆதரிக்கும் இந்தோனீசிய தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்கள் என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக இந்தோனீசிய போலிசாருக்கு நெருக்கமான தகவல்கள் கூறின. அந்த நால்வரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்தாம் தீவு வழியாக இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!