ஒபாமாவுடன் நடனமாடிய 106 வயது மூதாட்டி

வா‌ஷிங்டன்: இதுவரை 18 அமெரிக்க அதிபர்களை சந்தித் துள்ள 106 வயதான மூதாட்டி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தது தமக்கு அளவுகடந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகக் கூறியுள் ளார். தெற்கு கரோலினாவைச் சேர்ந்த வெர்ஜினியா மெக்லாரின் என்ற அந்த மூதாட்டி வெள்ளை மாளிகையில் ஒபாமா தம்பதியைப் பார்த்ததும் அவரால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

'அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரைச் சந்தித்து விட்டேன்' எனக்கூறி உற்சாக மடைந்த அந்த மூதாட்டி திரு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெலின் கைகளை பிடித்துக்கொண்டு நடனம் ஆடினார். அந்த மூதாட்டியை மேலும் உற்சாகப்படுத்த திரு ஒபாமாவும் அவரது மனைவியும் மூதாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடனம் ஆடியிருக்கின்றனர். அமெரிக்காவை வடிவமைத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம், கறுப்பின வரலாற்று மாதமாக அமெரிக்காவில் கடைப்பிடிக் கப்படுகிறது. இதையொட்டி அந்த மூதாட்டி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். "திரு ஒபாமாவை சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை" என்று கூறிய அந்த மூதாட்டி தன் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்ட தாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் 106 வயதான மூதாட்டி வெர்ஜினியா மெக்லாரின், ஒபாமா தம்பதியரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கி விட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!