கடவுச்சீட்டை மறந்த சுவாரெஸ்

பார்சிலோனா: லண்டன் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஆர்சனல்=பார்சிலோனா குழுக்கள் மோதின. இதற்காக நேற்று முன்தினம் காலையில் லண்டனுக்குப் புறப்பட்டது பார்சிலோனா குழு. விமான நிலையத்திற்கு வந்த பின்புதான் அக்குழுவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரெஸ் தமது கடவுச்சீட்டை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து, குழு அதிகாரிகளில் ஒருவர் சுவாரெசின் வீட்டிற்குச் சென்று கடவுச்சீட்டை எடுத்து வர, உரிய நேரத்தில் அவரால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை இந்தப் பருவத்தில் பார்சிலோனாவிற்காக 37 போட்டிகளில் பங்கேற்ற சுவாரெஸ் 41 கோல்களையும் புகுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!