கூட்டு சேர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை

இங்குள்ள பெட்ரோல் நிறுவனங் கள் கூட்டு சேர்ந்து செயற்கையாக பெட்ரோல் விலையை உயர்த்து கின்றன என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம் நேற்று தெரிவித்தது. கால்டெக்ஸ், எஸ்ஸே„, ஷெல், சிங்கப்பூர் பெட்ரோலியம் எனும் நான்கு பெட்ரோல் நிறுவனங்கள் ஒன்று மற்றதன் பெட்ரோல் விலை களைப் பார்த்து தங்கள் விலை களை நிர்ணயித்து வந்தாலும், அவை வேண்டுமென்றே தங்கள் விருப்பத்துக்கு விலையை நிர்ண யிக்கவில்லை என்று ஆணையத் தின் இடைக்கால அறிக்கை தெரிவித்தது.

அரசாங்க வரி உயர்வைக் காட்டிலும் ஏன் தங்களது பெட் ரோல் விலைகள் அதிகமாக உள்ளது என்று சிங்கப்பூரின் நான்கு பிரதான பெட்ரோல் நிறு வனங்களிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆணையம் கேட்டிருந்தது. பெட்ரோல் நிறுவனங்கள் தங்கள் விலைகளை உயர்த்தி லாபத்தைச் சம்பாதிக்கின்றன என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் புகார் கூறியதை அடுத்து ஆணையம் இந்த வினாவை அவற்றின் முன் வைத்தது. அதன் பிறகு கச்சா எண்ணெய் யைக் காட்டிலும் பெட்ரோல் விலை கள் குறைவாகவே சரிந்தன. பத் தாண்டுகளில் அது ஆக அதிக மாக அதாவது 70% குறைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!