வேன் ஹால் தலை தப்பியது

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு அடுத்த ஆட்டத்திலும் தோற்றால் அக்குழு வின் நிர்வாகியான வேன் ஹால் அக்குழுவைவிட்டு துரத்தப்படுவது நிச்சயம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ணப் போட்டி யில் மேன்யூ 3=0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் நிலைக் குழுவான ஸ்ரூஸ்பரி டௌன் குழுவைத் தோற்கடித்ததால் இப் போதைக்கு அந்த ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறார் வேன் ஹால். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் மேன்யூவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் கிறிஸ் ஸ்மாலிங். முற்பாதியின் கூடுதல் நேரத்தில் யுவான் மாட்டாவும் 61வது நிமிடத்தில் லிங்கார்டும் மேன்யூ சார்பில் கோலடித்தனர்.

அடுத்த பருவத்தில் மேன்யூ நிர்வாகியாக ஜோசே மொரின்யோ பொறுப்பேற்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த யூரோப்பா லீக் ஆட்டத்தில் அதிகம் அறியப்படாத மிட்யுலேண்ட் குழுவிடம் 2=1 என மேன்யூ மண்ணைக் கவ்வ, வேன் ஹாலுக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து, நேற்றைய எஃப்ஏ கிண்ண ஆட்டத்திலும் மேன்யூ தோற்கும் பட்சத்தில் அவரது பதவி பறிக்கப்படுவது உறுதி எனக் கூறப்பட்டது. நல்லவேளையாக அந்த ஆட் டத்தில் மேன்யூ வென்றதால் வேன் ஹால் நிம்மதி அடைந்துள் ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!