பள்ளியில் நடக்கும் பாடல் வெளியீடு

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'தோழா'. இதில் அவரது ஜோடியாக 'பையா', 'சிறுத்தை' ஆகிய படங்களில் நடித்த, அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுனா தமிழில் நடித்துள்ள படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத் திறனாளிக்கும் மனரீதியாக பெரும் போராட்டத் தில் ஈடுபடும் ஒருவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'தோழா' படத்தின் கதையாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக் கும் ஏற்ற படமாக உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இந் நிலையில் இப்படத்தின் இசையை 26ஆம் தேதி வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை கார்த்தி சிறு வயதில் படித்த பள்ளியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள் ளனராம். சிறு வயதில் படித்த பள்ளிக்கு நாயகி தமன்னாவை கார்த்தி அழைத்து வர இருக் கிறார் என்றும் அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 2500 மாணவர்கள் முன்னிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

'தோழா' படத்தின் ஒரு காட்சியில் கார்த்தி, தமன்னா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!