இந்திய அதிபர்: பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த விருப்பம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் மரியாதைக்குரிய உறவுகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்று அதிபர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்தார். நாடாளுமன்ற வரவுசெலவு திட்டக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று இரு மன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். "பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த பாதுகாப்புப் படைகளுக்கு வாழ்த்துக்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள வலுவான, பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஒத்துழைப்புச் சூழ்நிலையை உருவாக்குவதில் பாகிஸ் தானுடன் பரஸ்பரம் மரியாதைக்குரிய உறவை ஏற் படுத்திக்கொள்ள அரசு விரும்புகிறது," என்று அதிபர் பிரணாப் முகர்ஜி சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!