இந்தியாவில் பாதுகாப்புமிக்க நகரம்: சென்னை முதலிடம்

இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க நகர்களில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. ஹைதராபாத், பெங்களூரு ஆகியவை அடுத்தடுத்த இடங் களைப் பெற்றுள்ளன. உலகளாவிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வை உலக ஆலோசனை நிறு வனமான மெர்சர் நடத்தியது. 'தரமிக்க வாழ்க்கை 2016' என்ற ஆய்வுப் பட்டியலில் உலக நகர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள் ளன. இந்தியாவிலேயே ஆக பாது காப்பு மிக்க நகரம் சென்னையாக இருந்தாலும் உலக அளவில் அது 113வது இடத்தில்தான் உள்ளது. ஹைதராபாத் 121வது இடத் திலும் பெங்களூரு 124வது இடத் திலும் இருக்கின்றன.

இந்தியாவின் தலைநகரான டெல்லி பட்டியலில் ஆறு இடங்கள் இறங்கி உலகிலேயே பாதுகாப்பு மிக்க நகர்கள் பட்டியலில் 161வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பாதுகாப்புமிக்க நகர்கள் பட்டியலில் மொத்தம் ஏழு இந்திய நகர்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் ஏழாவது இடத்தில் டெல்லி இருக்கிறது. தரமிக்க வாழ்க்கை என்று பார்க்கையில் இந்தியாவிலேயே ஹைதராபாத்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது தடவையாக இந்தப் புகழ் அதற்குக் கிடைத்துள்ளது.

தரமிக்க வாழ்க்கைப் பட்டியலிலும் இந்தியாவில் டெல்லிக்கு கடைசி இடம்தான் கிடைத்துள்ளது. சென்னை பாதுகாப்புமிக்க நகராக இருப்பதற்குக் காரணங் களை விளக்கிய ஆய்வு, ஒப்பிட் டுப் பார்க்கைளில் அங்கு குற்றச் செயல்கள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. காற்றுத் தூய் மைக்கேடும் குறைவு. அனைத் துலக, புகழ்பெற்ற ஆங்கில மொழி பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அண்மைய ஆண்டுகளில் மும்பை, டெல்லி நகர்களில் மக்கள் தொகை பெரிதும் அதி கரித்துள்ளது. இதனால் அங்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது சிரமமாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!