தமிழக தேர்தல் பிரசாரம் தொடங்கியது

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு இனிமேல்தான் என்றாலும் அரசியல் கட்சிகள் குறிப்பாக இரண்டு மிகப்பெரிய திராவிடக் கட்சிகள் அதற்குள் ளாக பிரசாரத்தைத் தொடங்கி விட்டன. திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள் கிட்டத்தட்ட முடங் கிவிட்டனர். திமுக தலைவரான கருணாநிதி வயது காரணமாக சக்கரநாற்காலியில் நடமாடிக் கொண்டு தள்ளாடி அரசியல் நடத்துகிறார். அதிமுக தலைவி ஜெயலலி தாவோ போயஸ் தோட்டம் என்றும் சிறுதாவூர் பங்களா என்றும் அடிக்கடி ஓய்வு எடுத் துக்கொண்டு போக்குக் காட்டு கிறார். முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல் நிலை சரியில்லையோ என்று மக்கள் சந்தேகப்படும் அளவுக்கு அவரின் செய்கைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அவர்கள் இருவரும் நேரே வாக்காளர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு தரும் படி தேர்தல் பிரசாரத்தை நடத்து வார்களா என்பது அந்தக் கட்சி களின் தொண்டர்களுக்கே சந் தேகமாகிவிட்டது.

இந்த சந்தேகத்தை மேலும் கிளப்பிவிடும் வகையில் இரண்டு கட்சிகளும் புதிய பாணி விளம் பர உத்தியை, பிரசாரங்களை முன்னதாகவே தொடங்கி இருக்கின்றன. எடுத்த எடுப்பிலேயே தலை வர்களைப் பார்த்தீர்களா? என்று இரண்டு தரப்புகளும் வாக்காளர் களைக் கேட்டு விளம்பரம், சுவ ரொட்டிப் போரை கிளப்பியுள்ளன. இதிலும் திமுக முந்திக் கொண்டது என்றாலும் அதற்கு அதிமுக சரியான பதிலடியைக் கொடுத்து வருகிறது. இந்தப் புதிய பாணி விளம்பரப் பிரசாரப் போரில், தன் பங்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வரும் அதிமுக தலைவியு மான ஜெயலலிதாவை நேரே பார்த்ததுண்டா என்று வாக்காளர் களைத் திமுக கேட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!